Thursday, March 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஓடும் லாரியில் குத்தாட்டம் போட்ட அஜித் ரசிகர்; துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழப்பு

    ஓடும் லாரியில் குத்தாட்டம் போட்ட அஜித் ரசிகர்; துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழப்பு

    நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்பட ரிலீஸ் கொண்டாத்தின்போது ஓடும் லாரி மீது ஏறி நடனம் ஆடிய அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார். 

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம்தான், துணிவு. வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து எச்.வினோத் – போனி கபூர்- அஜித்குமார் கூட்டணி மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளன. 

    இந்நிலையில், இன்று அதிகாலை துணிவு திரைப்படத்தின் முதல் காட்சி பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதற்காக ரசிகர்கள் பலரும் முன்னதாகவே திரையரங்குகளுக்கு முன்பாக கூடி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என குத்தாட்டம் போட்டனர். 

    அந்த வகையில், சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்கம் முன்பாக கூடிய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஏறி நின்று நடனம் ஆடிய அஜித் ரசிகர் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    உயிரிழந்த அஜித் ரசிகர் பரத்குமார் என்ற 19 வயது இளைஞர் என்பதும், இவர் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து கோயம்பேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    துணிவு திரைப்பட கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    ‘வாரிசு திரைப்படத்தைக் கண்டு கண் கலங்கினேன்’ – பிரபல இசையமைப்பாளர் பதிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....