Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கோல்டன் குளோபை வென்ற ஆர்ஆர்ஆர்; உற்சாகத்தில் படக்குழு குதூகலித்த வீடியோ..

    கோல்டன் குளோபை வென்ற ஆர்ஆர்ஆர்; உற்சாகத்தில் படக்குழு குதூகலித்த வீடியோ..

    ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

    பாகுபலி திரைப்படத்துக்கு பிறகு, இந்திய அளவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படமானது உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

    மேலும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. அப்போது திரைப்படத்தைக் கண்ட அமெரிக்காவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள் ஆர்ஆர்ஆர் படத்துக்கு தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். மேலும், சமீபத்தில் ஜப்பானில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் அங்கு 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, சமீபத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கருக்கு அடுத்த படியாக திரைத்துறையின் மிக உயரிய விருதாக பார்க்கப்படும் கோல்டன் குளோப் விருதின் நாமினேஷன் பட்டியலுக்கு இரண்டு பிரவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, சிறந்த திரைப்படம் (ஆங்கிலம் அல்லாத) பிரிவிலும், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இத்திரைப்படம் தேர்வாகியது.

    இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருதில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றுள்ளது. இதற்காக, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.

     இந்திய பாடல் ஒன்று கோல்டன் குளோப் விருதைப் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘வாரிசு திரைப்படத்தைக் கண்டு கண் கலங்கினேன்’ – பிரபல இசையமைப்பாளர் பதிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....