Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'வாரிசு திரைப்படத்தைக் கண்டு கண் கலங்கினேன்' - பிரபல இசையமைப்பாளர் பதிவு!

    ‘வாரிசு திரைப்படத்தைக் கண்டு கண் கலங்கினேன்’ – பிரபல இசையமைப்பாளர் பதிவு!

    ‘வாரிசு படத்தின் எமொஷன் காட்சிகளைக் கண்டு கண் கலங்கினேன்.’ என இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார். 

    நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் கோலாகலமாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். மேலும், இயக்குநர் வம்சி இத்திரைப்படத்தை இயக்க, தமன் இசையமைத்துள்ளார். 

    முழுக்க முழுக்க குடும்பம் மற்றும் ஆக்‌ஷன் கலந்த வெகுஜன திரைப்படமாக உருவாகியுள்ள வாரிசு படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும், திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெறும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தை இசையமைப்பாளர் தமன் சமீபத்தில் பார்த்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு திரைப்படம் குறித்த தனது பார்வையை தமன் பதிவிட்டுள்ளார். 

    அப்பதிவில், ‘ விஜய் அண்ணா.., வாரிசு படத்தின் எமொஷன் காட்சிகளைக் கண்டு கண் கலங்கினேன். கண்ணீர் விலை மதிப்பற்றது. வாரிசு படம் என் குடும்பம். இது மனதுக்கு நெருக்கமான திரைப்படம். இப்படியான படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி அண்ணா. லவ் யூ அண்ணா’ என்று தெரிவித்துள்ளார். 

     தெலுங்கனா மற்றும் ஆந்திராவில் வாரிசு திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    நடிகர் விஜய் வெளியிட்டுள்ள ஷாருக்கானின் டிரைலர்.. இதென்ன புதுசா இருக்கு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....