Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா vs இலங்கை: விராட் கோலியால் ஜாலியாக ஜெயித்த இந்தியா..

    இந்தியா vs இலங்கை: விராட் கோலியால் ஜாலியாக ஜெயித்த இந்தியா..

    இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. 

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரிலும், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இலங்கை அணி விளையாடி வருகிறது. 

    இதில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று கவுகாத்தி மைதானத்தில் தொடங்கியது. 

    இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி, டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. 

    இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் சிறப்பான தொடக்கம் அளித்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோஹித் சர்மா 83 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். இதன்பின்பு, விராட் கோலி களமிறங்கினார்.

    மேலும், சுப்மன் கில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து, ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். விராட் கோலி ஒரு புறம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களுக்கும், கே.எல். ராகுல் 39 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 14 ரன்களுக்கும், அக்சர் படேல் 9 ரன்களுக்கும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 

    நிலைத்து ஆடிய விராட் கோலி க்ளாஸாக சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 45-ஆவது ஒருநாள் போட்டி சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்ததும் ஹெல்மட்டை கழட்டி காற்றில் துள்ளிக்குதித்து தனது சந்தோஷத்தை விராட் கோலி வெளிப்படுத்தினார். ரசிகர்கள் குஷியில் இருந்தனர். மொத்தத்தில் விராட் கோலிக்கு இது 73-ஆவது சர்வதேச சதமாகும். இருப்பினும், 87 பந்துகளுக்கு 113 ரன்கள் அடித்த நிலையில் தனது விக்கெட்டை இவர் பறிகொடுத்தார். 

    மொத்தத்தில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் முகமது ஷமி 4 ரன்களுடனும், முகமது சிராஜ் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    இதைத்தொடர்ந்து, இலங்கை அணி 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடியது. ஆனால், இலங்கை அணி தொடக்கம் முதலே தொடர்ந்து விக்கெட்களை வீழ்ந்த வண்ணம் இருந்தது. 

    ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் இலங்கை அணியின் தொடக்க வீரர் நிசாங்கா 72 ரன்கள் எடுத்து தனது பங்களிப்பை அளித்தார். இவரைத் தொடர்ந்து. இலங்கை அணியின் டி சில்வா 47 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரை தொடர்ந்து யாரும் சோபிக்காத நிலையில், இலங்கை அணியின் கேப்டன்  தசூன் சனகா நங்கூரம் போல  நின்று ஆடினார். ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் இருந்த அவர், 88 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து அசத்தினார். இருப்பினும், வெற்றிக் கனியை அவரால் அடைய முடியவில்லை. 

    50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 

    நாளை இந்தியா மற்றும் இலங்கை மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

    கோல்டன் குளோபை வென்ற ஆர்ஆர்ஆர்; உற்சாகத்தில் படக்குழு குதூகலித்த வீடியோ..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....