Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மீண்டும் தள்ளிப்போகிறதா தனுஷ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி..

    மீண்டும் தள்ளிப்போகிறதா தனுஷ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி..

    வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில், சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்திற்கு ஜி..வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

    தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. 

    இதைத்தொடர்ந்து, வாத்தி திரைப்படத்தின் டீசரும், புகைப்படங்களும், ஒரு பாடலும் வெளியிடப்பட்டன. ரசிகர்களும் வாத்தி திரைப்படத்தை கொண்டாட தயாராகி வந்தனர். இந்நிலையில், வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது. 

    எந்த தேதி என்று குறிப்பிடாமல் வெறும் தகவல்கள் மட்டும் வெளிவந்த நிலையில், சமீபத்தில்  வாத்தி திரைப்படத்தை தயாரித்துள்ள சித்தாரா நிறுவனம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதிதான் வாத்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் சற்று துவண்டுப்போய் உள்ளனர். 

    வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றும் வித்தை; சென்னையை சேர்ந்தவர் கைது..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....