Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றும் வித்தை; சென்னையை சேர்ந்தவர் கைது..

    வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றும் வித்தை; சென்னையை சேர்ந்தவர் கைது..

    சென்னையில் வெளிநாட்டு தொலைப்பேசி அழைப்புகளை உள்ளநாட்டு அழைப்புகளாக மாற்றி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். 

    சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் ஏர்டெல் நிறுவனம் சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக வெளிநாட்டு தொலைப்பேசி அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றும் சட்டவிரோத தொலைப்பேசி தொடர்பு மையம் செயல்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக தங்களது நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இதையடுத்து, இந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சைபர் குற்றப்பிரிவு சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மேலும் இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்தப் புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டதில், ராயப்பேட்டை மற்றும் சிஐடி நகர் ஆகிய பகுதிகளில் தொலைப்பேசி தொடர்பு மையம் செய்யப்படுவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நேற்று அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

    இந்தச் சோதனையில், 6 சிம் பாக்ஸ், 1,700 சிம்கார்டுகள், மோடம்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த தொலைப்பேசி மையத்தை நடத்தி வந்த ஐஸ்ஹவுஸ் வைக்கோல் தொட்டி தெருவில் வசித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த பஷீர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சௌதி அரேபியாவைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்ற தனது நண்பர் இருப்பதாகவும், அவர் தான் இந்த மோசடியை செய்யத் தூண்டியதாகவும், அதற்கான பொருள்களையும் அவரே வாங்கி அனுப்பியதாகவும் பஷீர் தெரிவித்துள்ளார். 

    பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த விடியா திமுக – விமர்சித்த அன்பழகன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....