Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடர்; அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து அணி

    இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடர்; அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து அணி

    இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள இருபது ஓவர் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரிலும், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இலங்கை அணி விளையாடி வருகிறது. 

    இதில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் தொடங்கியது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும், கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியது. 

    மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. 

    இந்த சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும், இருபது ஓவர் தொடரும் நடைபெற உள்ளன. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடும் ஒருநாள் தொடர் ஜனவரி 18 அன்றும் இருபது ஓவர் தொடர் ஜனவரி 27 அன்றும் தொடங்கவுள்ளன.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள இருபது ஓவர் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

     நியூசிலாந்து அணி;

    மிட்செல் சான்ட்னர், (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளவர், கான்வே, ஜகோப் டஃபி, லாகி ஃபர்குசன், பென் லிஸ்டர், டேரில் மிட்செல், கிளென் பிளிப்ஸ், மைக்கேல் ரிப்பன், ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி, பிளைர் டிக்னர்.

    மீண்டும் தள்ளிப்போகிறதா தனுஷ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....