Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஒரே பாலின திருமணம்; முக்கிய கோப்பில் கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    ஒரே பாலின திருமணம்; முக்கிய கோப்பில் கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப் பாதுகாப்பு மசோதாவின் கோப்புகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டார். 

    அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்படுவதாக, அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த ரத்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. 

    இதனின் தாக்கமாக, ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்துகொள்ளும் சட்ட அங்கீகாரமும் ரத்து செய்யப்படுமோ என்ற பேச்சு நிலவி வந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்கான மசோதாவை கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றியது. 

    இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் செனட் சபையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம் ஒரு மாகாணத்தில் தன்பாலின திருமணம் செய்து கொண்டவர்கள் திருமணங்கள் நாட்டின் பிற மாகாணங்களிலும் செல்லுபடியாகும்.  

    செனட் சபையில், நிறைவேற்றப்பட்ட ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப் பாதுகாப்பு மசோதாவில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கோப்புகள் அனுப்பிவைக்கப்பட்டது. 

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்த கோப்புகளில் கையொப்பமிட்டு இந்த மசோதாவை சட்டப்பூர்வமாக ஆக்கியுள்ளார். முன்னதாக, அமெரிக்காவில் ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு சட்ட அங்கீகாரம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

    நீதானே என் பொன்வசந்தம்: பத்தாண்டை நிறைவு செய்யும் வருண்-நித்யாவின் காதல் கதை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....