Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு- 3 பேர் படுகொலை

    அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு- 3 பேர் படுகொலை

    அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (ஜூலை 17)  துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

    இண்டியானா மாகாணத்தின் இண்டியானாபொலிஸ் நகரில் உள்ள க்ரீன்வுட் பார்க் மால் எனப்படும் உணவகத்தில் நேற்று மாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் ரைபிள் வகை துப்பாக்கியையும், சிறிதளவு தோட்டாக்களையும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.  இந்த பெயர் தெரியாத நபர், உணவகத்தில் இருந்த மூன்று பேரை சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்த சம்பவத்தின் போது உணவகத்தில் இருந்த பொதுமக்களில் ஒருவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியின் மூலம் கொலையாளியை சுட்டுக்கொன்றதாக இண்டியானாபொலிஸ் நகரின் காவல் அதிகாரி ஜிம் ஐசான் கூறியுள்ளார்.

    ‘சட்டப்படி தன்னிடம் இருந்த துப்பாக்கியின் உதவி கொண்டு கொலையாளியை சுட்டு வீழ்த்திய 22 வயது மிக்க இளைஞர்தான் இன்றைய கதாநாயகன். இந்த சம்பவம் நடைபெற தொடங்கிய போதே, கொலையாளியை அவர் சுட்டுக்கொன்றுள்ளார்.’ என ஜிம் ஐசான் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளி, இறந்தவர்கள் மற்றும் 22 வயது இளைஞர் என யாருடைய பெயரையும் காவல்துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஜூன் மாத குடியரசு தின விடுமுறை நாள்களில் மட்டும், சுமார் 220 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 570க்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர்.

    துப்பாக்கி வன்முறை காப்பகம் (gun violence archive) எனப்படும் தரவின் படி, இந்த ஆண்டில் அமெரிக்கா முழுவதும், 315 பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. நாடு முழுவதும் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இந்த ஆண்டு மட்டும் 22,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவின் குடியரசு தின விடுமுறை நாள்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறுவது இயல்பான ஒன்றாக கருதப்படுகிறது. 2021ம் ஆண்டு குடியரசு தின விடுமுறை நாள்களில் 180 பேர் துப்பாக்கிச்சூட்டினால் கொல்லப்பட்டனர். 516 பேர் காயமடைந்தனர். 

    நாடெங்கும் நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து சென்ற வாரம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாட்டை ‘கொலைக்களமாக’ மாற்றியுள்ளது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஒலிம்பியாட் செஸ் போட்டி: வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....