Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபிரதமர் மோடி பிறந்த நாளில் 'வேற்றுமையில் ஒற்றுமை' திருவிழா - பா.ஜ.க. முடிவு

    பிரதமர் மோடி பிறந்த நாளில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ திருவிழா – பா.ஜ.க. முடிவு

    பிரதமர் மோடி பிறந்த நாளில் ‘வேற்றுமையில் ஒற்றுமை திருவிழா’ கொண்டாட பாரதிய ஜனதா கட்சியினர் முடிவு செய்துள்னனர். 

    பிரதமர் மோடி பிறந்த நாள் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மேலும், அந்த நாளில் சேவை தினமாக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன்காரணமாக, பல்வேறு சேவைகளை பாஜகவினர் செய்து வருகின்றனர். 

    இந்நிலையில், இந்த ஆண்டு அவரின் பிறந்த நாளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    அதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி பிறந்த நாளில் நாடு முழுவதும் வேற்றுமையில் ஒற்றுமை திருவிழா கொண்டாட முடிவு செய்துள்ளனர். 

    மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ம் தேதி வரை இந்த ‘வேற்றுமையில் ஒற்றுமை திருவிழா’ கொண்டாடப்பட உள்ளது. இதில் முக்கிய பகுதியாக, ஒரு மாநிலத்தின் பாஜக நிர்வாகிகள் வேறு மாநிலங்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் பின்பற்றுவார்கள் என பாஜக கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. 

    மேலும், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை, ரத்த தான முகாம்கள் என பல்வேறு சேவைகள் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி தலைமை மாநில தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

    பயணம் வெவ்வேறு… ஆனால் இலக்கு தமிழ்நாடு; இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் கலக்கல் பதிவு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....