Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஎய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பெயர் மாற்றம்

    எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பெயர் மாற்றம்

    நாட்டில் உள்ள 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு, உள்ளூரைச் சேர்ந்த புகழ் பெற்ற மனிதர்கள் மற்றும் நினைவு சின்னங்களின் பெயரை வைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    இந்தியாவில் உள்ள 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு, அந்த மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற மனிதர்கள் அல்லது நினைவுச் சின்னங்களின் பெயரை வைக்கும் திட்டம் மத்திய அரசால் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

    இதற்காக ஏற்கனவே பெரும்பாலான எய்ம்ஸ் மருத்துவமனைகள், மூன்று அல்லது நான்கு பெயரை பரிந்துரை செய்துள்ளன. மேலும், அந்த பெயர் வைப்பதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தாலும், அனைத்து மருத்துவமனைகளும் எய்ம்ஸ் என்றே அழைக்கப்படுகிறது. 23 ஏய்ம்ஸ் மருத்துவமனைகளில் பெரும்பாலானவை முழுமையாக இயங்கி வருகின்றன. சில மருத்துவமனைகள் மட்டும் பிரதான் மந்திரி ஸ்வஸ்திய யோஜனா (PMSSY) எனப்படும் திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

    நாடு முழுவதும் இருக்கும் 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பெயரை மாற்றுவதற்கான முன்மொழிவை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதன் படி, ஒவ்வொரு ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கும் அது இருக்கும் பகுதியில் உள்ள, புகழ் பெற்ற மனிதர்களின் பெயரை வைக்கவும், சுதந்திர போராட்ட வீரர்களின் பெயரை வைக்கவும், புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் பெயரை வைக்கவும் ஆலோசனைகள் பெறப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஜெயலலிதா இறப்புக்கு காரணம் என்ன? ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் அறிக்கை தாக்கல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....