Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஜெயலலிதா இறப்புக்கு காரணம் என்ன? ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் அறிக்கை தாக்கல்

    ஜெயலலிதா இறப்புக்கு காரணம் என்ன? ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் அறிக்கை தாக்கல்

    நீதிபதி ஆறுமுகசாமி தேதிஜெயலலிதா இறப்பு குறித்த இறுதி அறிக்கையை ஆகஸ்ட் 23 ம் தேதி அரசிடம் சமர்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னாள் முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 158 பேரிடம் விசாரணையை நிறைவு செய்துள்ளது.

    முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், சசிகலாவின் உறவினா்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் என மொத்தம் 159 பேரிடம் விசாரணை நடைபெற்றது.

    பின்னர், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்னும் ஓரிரு நாளில் அரசிடம் 500 பக்கம் அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

    அதில் டிசம்பர் 5 ம் தேதி ஜெயலலிதா அவர்களுக்கு உரிய மருத்துவ நடைமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு அப்பலோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உடலை பரிசோதித்து மூளை மற்றும் இதயம் செயலிழந்தது என்பதை உறுதி செய்து டிசம்பர் 5 ம் தேதி 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    எனவே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

    மேலும் கட்டுப்படுத்த முடியாத அளவிலான நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்றும், பாக்டீரியா ரத்தத்தில் பரவி இருந்தது என்றும், இது போல உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் காரணமாக உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 14 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட இந்த ஆணையத்தின் அறிக்கை தற்போது தயாராகி வருவதாகவும் விரைவில் தமிழக அரசிடம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி இறுதி அறிக்கையை அரசிடம் சமர்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் எதிர்காலமாகத் திகழும்.. மத்திய கல்வி அமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....