Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மது போதையில் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பிரதமர்- வைரலான காணொளிக்கு விளக்கம்

    மது போதையில் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பிரதமர்- வைரலான காணொளிக்கு விளக்கம்

    மதுபோதையில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பின்லாந்து நாட்டு பிரதமர் சன்னா மரின் பதவி விலக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

    பின்லாந்து நாட்டில் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்த 36 வயதான சன்னா மரின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். 

    இந்நிலையில், சமீபத்தில் சன்னா மரின் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்தக் காணொளியை பார்த்த பலரும் சன்னா மரின் போதைப்பொருளை உட்கொண்டு நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டதாக குற்றம் சாட்டி விமர்சனம் செய்தனர். 

    மேலும், குடிமக்களுக்கு எடுத்துக்காடடாக இருக்க வேண்டிய நாட்டின் பிரதமரே இவ்வாறு நடந்து கொள்வதா என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

    அதுமட்டுமின்றி, சன்னா மரின் போதைப்பொருள்களை பயன்படுத்தினாரா என்பதை பரிசோதிக்க வேண்டும் என்றும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அவர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக வலியுறுத்தி வருகின்றன. இதன்காரணமாக அவரது பிரதமர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

    இதுகுறித்து விளக்கம் அளித்த பின்லாந்து பிரதமர் சன்னா மரின், தான் எந்த போதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை என்றும் சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

    நான், என் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி செய்தேன். நான் எந்தவிதமான போதைப் பொருள்களையும் பயன்படுத்தவில்லை. எனது தனிப்பட்ட வீடியோ பொதுவெளியில் பகிரப்பட்டத்தை நினைத்து ஏமாற்றம் அடைந்துள்ளேன். ஆம், மாலை வேளையில் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டியில் கலந்து கொண்டேன். 

    நடனம் ஆடினேன், பாட்டு பாடினேன். மது அருந்தினேன். ஆனால், நான் எந்தவித போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை. நான் செய்தது எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டதுதான். 

    போதைப்பொருள் தொடர்பாக பரிசோதனை நடத்துவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதேபோல், எனது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இப்போது இருப்பதுபோலவே இருக்க விரும்புகிறேன். அது ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன். 

    இவ்வாறு, அவர் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். 

    முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா தொற்று விதிமுறைகளை மீறி சன்னா மரின், இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்று நேரம் கழித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவர் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது. 

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....