Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநீருக்கு அடியில் கொலு பொம்மை கண்காட்சி - சென்னை மரைன் கிங்டமில் வித்தியாசமான முயற்சி

    நீருக்கு அடியில் கொலு பொம்மை கண்காட்சி – சென்னை மரைன் கிங்டமில் வித்தியாசமான முயற்சி

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விஜிபி மரைன் கிங்டமில் நீருக்கடியில் கொலு அமைக்கப்பட்டுள்ளது. 

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபி மரைன் கிங்டமில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நீருக்கடியில் கொலு அமைக்கப்பட்டுள்ளது. 

    இந்த நீருக்கடியில் அமைக்கப்பட்டிருக்கும் கொலுவில், ஏழு படிகளில் 55 பொம்மைகள் உள்ளன. இந்தக் கொலு சுமார் 9 அடி நீளமும் 7 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.  

    இதுகுறித்து, விஜிபி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் விஜிபி ரவிதாஸ் தெரிவித்துள்ளதாவது:

    அனைத்தையும் ஒன்றாக இணைப்பது மிகவும் சவாலானது. மீன் பொம்மைகள் மற்றும் சிலைகளைத் தட்டக்கூடாது போன்ற பல அளவுகளை நாங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. படிக்கட்டு நனையாமல் இருக்க பல சோதனைகள் செய்தோம். உண்மையான காட்சிக்கு மூன்று நான்கு  நாட்களுக்கு முன்பாக, குழு இதை உப்பு நீரில் சோதித்தது. 

    ஒவ்வொரு பொம்மையும் தண்ணீருக்குள் இருக்கும் போது பெயிண்ட் கரையாமல் இருக்க பிரத்யேக பூச்சு இருக்கும். பொம்மைகள் வழியாக தண்ணீர் செல்லும் வகையில் துளைகள் போடப்பட்டுள்ளது. பொம்மைகள் மிதக்காமல் இருக்க பல சோதனைகளையும் செய்தோம்.

    பெரும்பாலான மக்கள் திருவிழா விடுமுறை நாட்களில் எங்களைப் பார்க்க வருகிறாரகள் . அவர்களுக்கு பண்டிகை உணர்வையும் தோற்றத்தையும் கொடுக்கவே விரும்புகிறோம்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    விஜிபி மரைன் கிங்டம் புதுமையான யோசனைகளை முன்னெடுத்து வருகிறது.  கடந்த ஆண்டுகளில் ஒரு ஸ்கூபா விநாயகரையும் கிறிஸ்துமஸ் சாண்டாவையும் விஜிபி குழு அமைத்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: நடுவானில் வந்த வெடிகுண்டு மிரட்டல்; படையெடுத்த போர் விமானங்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....