Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஒரே நேரத்தில் ட்ரெண்டான ''ரஜினி - கமல்'' புகைப்படங்கள்.. ஜெயிலர், இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்

    ஒரே நேரத்தில் ட்ரெண்டான ”ரஜினி – கமல்” புகைப்படங்கள்.. ஜெயிலர், இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்

    தமிழ் திரையுலகின் மாபெரும் இரு ஜாம்பவான்களின் புகைப்படங்கள் ஒரே நேரத்தில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    உலகநாயகன் கமல் மற்றும் ஷங்கர் இணைந்து பணியாற்றிய திரைப்படம்தான் இந்தியன்.1996-ம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அவ்வபோது இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி பேச்சுகள் வந்த வண்ணமே இருந்தன. 

    இதைத் தொடர்ந்து, சுமார்  24 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இந்தியன் இரண்டாம் பாகம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்தார். 2019-ம் ஆண்டு லைகா நிறுவனம் தயாரிக்க படத்தின் படபிடிப்பு கமலுடன் ஆரம்பித்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் இந்தியன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கபட்டிருந்தது.

    இதன்பின்பு, உலகநாயகன் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். அதன்படி, இந்தியன்-2 திரைப்படத்தின் படப்படிப்பு கடந்த மாதம் தொடங்கியது.

    இந்நிலையில், தற்போது ‘ இந்தியன்-2’ படப்பிடிப்பு தளத்தில் கமலுக்கு மேக்கப் போடுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இப்புகைப்படமானது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    மேலும், தற்போது ட்விட்டரில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் சென்றுக்கொண்டிருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    naayagan meendum vara

    தமிழ் திரையுலகின் மாபெரும் இரு ஜாம்பவான்களின் புகைப்படங்கள் ஒரே நேரத்தில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருவது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: “என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது” பொன்னியின் செல்வன் புரோமோஷனில் சரத்குமார் ஆவேசம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....