Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்திமுக மாவட்ட செயலாளர்கள் 7 பேர் அதிரடி மாற்றம்.. புதிய பட்டியலை வெளியிட்ட துரைமுருகன்

    திமுக மாவட்ட செயலாளர்கள் 7 பேர் அதிரடி மாற்றம்.. புதிய பட்டியலை வெளியிட்ட துரைமுருகன்

    திமுகவில் கோவை உட்பட 7 மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

    திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

    திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல் வெயிடப்பட்டுள்ளது. திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த பட்டியலை நேற்று வெளியிட்டார். 

    திமுக மூத்த அமைச்சர்கள் ஏற்கனவே வகித்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருசில அமைசர்களின் பதவிகள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

    நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த மூர்த்திக்கு பதிலாக செந்திலும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் செங்கோட்டையனுக்கு பதிலாக மதியழகனும், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வரதராஜனுக்கு பதிலாக தளபதி முருகேசனும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    திமுக அமைப்பு செயலாராக இருந்த ஆர்.எஸ்.பாரதி செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதால், புதிய அமைப்பு செயலாளர் பொறுப்பு “அன்பகம்” கலைக்கு  வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும், அக்டோபர் 9 ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பாவம் ஓபிஎஸ், கலங்கிப் போய் எதையெதையோ பேசுகிறார் – அமைச்சர் துரைமுருகன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....