Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இங்கிலாந்து நாடு ஏவிய ராக்கெட்: தோல்வியில் முடிந்த முயற்சி

    இங்கிலாந்து நாடு ஏவிய ராக்கெட்: தோல்வியில் முடிந்த முயற்சி

    இங்கிலாந்து ஏவிய முதல் ராக்கெட் தோல்வியில் முடிந்ததால் அந்நாட்டு விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

    இங்கிலாந்து முதன் முதலாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதன்படி, விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் ‘போயிங் 747’ விமானத்தில் 70 அடி உயர ‘லாஞ்சர் ஒன்’ என்ற ராக்கெட்டை பொருத்தி அதில் 9 செயற்கை கோள்களை வைத்து விண்ணில் செலுத்த முடிவு செய்தது. 

    இதன்பிறகு, இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து விமானம் புறப்பட்டது. மேலும் திட்டமிட்டபடி, அயர்லாந்தின் தெற்கே உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக பிரிந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 

    இருப்பினும் ராக்கெட் 9 செயற்கை கோள்களை சுற்றுவட்ட பாதையில் சரியாக நிறுத்த முடியவில்லை. இதனால் இங்கிலாந்து நாட்டின் முதல் ராக்கெட் விண்ணில் ஏவப்படாமல் போனது. 

    இந்தச் சம்பவம் தொடர்பாக விர்ஜின் ஆர்பிட் நிறுவனம், செயற்கை கோள்கள் சுற்றுப் பாதையை அடைவது குறித்த தங்களின் முந்தைய ட்விட்டை அகற்றுவதாகவும், தங்களால் முடிந்தால் கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளது. 

    இங்கிலாந்து நாடு ஏவிய இந்த ராக்கெட் தோல்வியில் முடிந்ததால் விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்தனர். இங்கிலாந்து தயாரிக்கும் செயற்கைகோள்கள் வெளிநாட்டு விண்வெளி நிலையங்கள் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    ஆளுநர் உருவ பொம்மையின் மீது செருப்பு வீச்சு.. பரபரப்பில் புதுச்சேரி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....