Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஆளுநர் உருவ பொம்மையின் மீது செருப்பு வீச்சு.. பரபரப்பில் புதுச்சேரி

    ஆளுநர் உருவ பொம்மையின் மீது செருப்பு வீச்சு.. பரபரப்பில் புதுச்சேரி

    ஆர்.என். ரவியின் உருவ படத்தை செருப்பால் அடித்தும் உருவ பொம்மையை எரித்தும் ஒரு கிலோ மீட்டர் தூரம் தர தர வென்று ரோட்டில் இழுத்துச் சென்றதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் போன்ற வார்த்தகைளை தவிர்த்தார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியின் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அறிவித்திருந்தனர்.

    அதன்படி காமராஜர் சிலை முன்பு ஒன்று கூடிய தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ரவியின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காமராஜர் சிலை அருகே நடந்த போராட்டத்தின் போது திடீரென போராட்டகாரர்கள்  ஆளுநர் ரவியின் உருவ பொம்மையை எரித்தப்படி ரோட்டில் தரதரவென இழுத்து வந்தனர்.

    இதனை அறிந்த போலீசார் அவர்களை நோக்கி ஓடி உருவ பொம்மை பிடுங்க முயன்றனர். அப்போது போராட்டக்காரர்கள் அதையும் மீறி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆர். என். ரவியின் உருவ பொம்மையை ரோட்டில் தர தர என்று இழுத்துச் சென்றதால் இரு தரப்பினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து உருவ பொம்மை பிடுங்கி அப்புறப்படுத்திய போலீசார் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை கைது செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ‘திமுக தலைவர் ஸ்டாலின் செய்வது திசை திருப்பும் முயற்சியே’ – அதிமுக குற்றச்சாட்டு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....