Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழ்நாட்டை மீண்டும் தவிர்த்தாரா ஆளுநர்? - கிளம்பிய புதிய சர்ச்சை

    தமிழ்நாட்டை மீண்டும் தவிர்த்தாரா ஆளுநர்? – கிளம்பிய புதிய சர்ச்சை

    பொங்கலை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு அரசின் இலச்சினை இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த ஆண்டுக்கான முதலாவது சட்டமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை ஆளுநர் பயன்படுத்தாதது பெரிய அளவில் சர்ச்சையானது.

    இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் ஆண்டுதோறும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும், ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படவுள்ளது. 

     

     

    இந்த தேநீர் விருந்துக்கு, கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட அழைப்பிதழில், தமிழக அரசின் இலச்சினையும், தமிழ்நாடு ஆளுநர் எனவும் அச்சடிக்கப்பட்டிருந்தது. ஆனால், இம்முறை இரண்டுமே தவிர்க்கப்பட்டது. இதனால் ஆளுநர் மட்டும் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சிக்கு இடையேயான மோதல் போக்கானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    டிரைலர் விழாவில் கண்ணீர் விட்ட சமந்தா; காதல் நிலையானது என பேச்சு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....