Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசு, துணிவு திரைப்படங்களின் அதிகாலை காட்சிகள் ரத்து - ஏமாற்றத்தில் ரசிகர்கள்

    வாரிசு, துணிவு திரைப்படங்களின் அதிகாலை காட்சிகள் ரத்து – ஏமாற்றத்தில் ரசிகர்கள்

    வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு ஜனவரி 13 முதல் 16 வரை அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இத்திரைப்படமானது வெளியாகவுள்ளது. 

    துணிவு திரைப்படம் நாளை காலை 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் நாளை காலை 4 மணிக்கும் வெளியாகவுள்ளது. இதனால், தமிழகம் மட்டுமல்லாமல், திரைப்படம் வெளியாகும் பல இடங்களில் அதிகாலை காட்சிகள் திரையிடப்படவுள்ளன. 

    இந்நிலையில், வாரிசு, துணிவு திரைப்படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு ஜனவரி 13 முதல் 16 வரை அனுமதியில்லை என்று திரைத்துறை இணை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மேலும், அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையை விட அதிகமாக விற்கும் திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், திரையரங்குகளுக்கு வெளியே பெரிய பேனர்கள் அமைத்து பால் ஊற்றுவது போன்ற செயல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    திரைத்துறையின் இந்த அறிக்கை திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    தமிழ்நாட்டை மீண்டும் தவிர்த்தாரா ஆளுநர்? – கிளம்பிய புதிய சர்ச்சை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....