Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கடும் சேதம் அடைந்த ரஷ்ய போர்க்கப்பல் : உக்ரைன் ராணுவத்தின் வேலையா ?

    கடும் சேதம் அடைந்த ரஷ்ய போர்க்கப்பல் : உக்ரைன் ராணுவத்தின் வேலையா ?

    நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் போர்தொடங்கி இன்னும் நடைபெற்று வருகிறது. வோல்டிமிர் ஜெலன்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு பின்வாங்காமல் இன்னும் போரிட்டு வருகிறது. போரில் தொடக்கத்தில் ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வந்தனர். 

    இதனை கட்டுக்குள் கொண்டுவரவும், ரஷ்யாவின் தாக்குதலை தடுத்து நிறுத்தவும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத்தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து ஜி7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற ஏனைய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத்தடையை விதித்தன. இதன் விளைவாக அந்த நாடுகள் பெட்ரோல் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவில் இருந்து தான் ஐரோப்பாவிற்கு 80 சதவீதம் கச்சாஎண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இப்படி உலகின் இயல்பு நிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இந்த ரஷ்ய-உக்ரைன் போர் நாளுக்கு நாள் சூடுபிடித்து கொண்டே வருகிறது. 

    சமீபத்தில் அமெரிக்கா உக்ரைன் ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்கியது. அமெரிக்க அதிகாரிகளும் உக்ரைன் சென்று வந்து உள்ளனர். இந்நிலையில், உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் நகரம் ரஷ்ய ராணுவ வீரர்கள்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறாமல் இருக்கின்றனர். மேயர் வாடிம் பொய்சென்கோ அந்த பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் மக்கள் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

    அதேநேரத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 800 கோடி டாலர் மதிப்பில் ஹெலிகாப்டர் உள்ளிட்ட ராணுவ உதவிகள் செய்வதாக தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு மேலாக போரை சந்தித்து வரும் உக்ரைன் நாட்டிற்கு உதவி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அவர். 

    உக்ரைனின் கடற்கரை நகரங்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த, கருங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் போர்க்கப்பல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தும் போது உள்ளே இருந்த ஆயுதங்கள் வெடித்து சிதறியதால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ரஷ்யா தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், உக்ரைன் கடற்கரை நகர மாகாணங்களின் கவர்னர் உக்ரைன் நடத்திய தாக்குதலால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 

    இதனை முற்றிலுமாக மறுத்துள்ள ரஷ்யா, கப்பலின் உள்ளே பாதிக்கப்பட்ட வீரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், இதுதொடர்பான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் அரசே தாங்கள் ஏவிய ஏவுகணையால் தான் பாதிப்பு ஏற்பட்டது என உறுதி செய்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....