Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெறித்தனமாக வேட்டையாடும் கே.ஜி.எஃப்; அதிரும் இந்திய திரையுலகம்!

    வெறித்தனமாக வேட்டையாடும் கே.ஜி.எஃப்; அதிரும் இந்திய திரையுலகம்!

    கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு, உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்தியர்கள் மத்தியில் இருந்த எதிர்ப்பார்ப்பு கொஞ்சம் நெஞ்சம் அல்ல! திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, திரைப்படம் பெரியதாய் எதையோ சாதிக்கப்போகிறது என்ற வார்த்தை பொதுமக்கள் முதல் சினிமா ப்ரியர்கள் வரை அனைவரிடத்திலும் இருந்து வந்தது. 

    இப்படியான வார்த்தைகளை நிரூபனம் செய்யும் வகையில்தான் கே.ஜி.எஃப் சேப்டர் 2 அமைந்துள்ளது. மிகவும் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியானது, கே.ஜி.எஃப். இந்தியா முழுவதும் பலத்த வரவேற்பை வெளியாகும்போதே பெற்றிருந்தது, திரைப்படம். ரசிகர்கள் கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு கொடுத்த வரவேற்பானது திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரையும் வியக்க வைத்தது. 

    இந்த வரவேற்புக்கு அடிப்படை காரணம் என்னவெனில், அது கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றியும், முதல் பாகம் ரசிகர்களிடம் விட்டுச்சென்ற கேள்வியும்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 2018 ஆம் ஆண்டு வெளியாகிய முதல் பாகம் கொடுத்த அதிர்வை ஏறத்தாழ நான்கு வருடங்களாக ரசிகர்கள் தங்களிடம் தக்கவைத்திருப்பதிலேயே கே.ஜி.எஃப் வீரியம் குறித்து நம்மால் யூகிக்க முடிகிறது. 

    யாஷ் அவர்களின் நடிப்பில், பிரசாந்த் நீல் அவர்களின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படமானது தனது முதல் பாகத்தில் மட்டும் அல்ல, இரண்டாம் பாகத்திலும் அதிர்வை விட்டுச்சென்றிருக்கிறது. ஆம்! தற்போது வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் சேப்டர் 2, கே.ஜி.எஃப் சேப்டர் 3 க்கான தாக்கத்தை விட்டுச்சென்றிருக்கிறது. 

    மேலும், நேற்று வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் சேப்டர் 2, வெறித்தனமான வசூல்வேட்டையை நிகழ்த்தி வருகிறது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே வியந்தபடி இருக்குமளவு  கே.ஜி.எஃப் வசூலில் கெத்து காட்டியுள்ளது. 

    kgf

    ஆம்! இந்தியாவில் மட்டும் முதல்நாள் வசூலில் கே.ஜி.எஃப் திரைப்படமானது, 134.5 கோடியை ஒட்டுமொத்தமாக ஈட்டியுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இதோடு நில்லாமல் திரைப்படமானது மேலும் பல வசூல் சாதனையை நிகழ்த்தவிருக்கிறது என்று திரைத்துறையைச் சார்ந்தவர்களும். திரையரங்கு உரிமையாளர்களும் தெரிவித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க; அஜித்குமார் இல்லாமல் தொடங்கிய ஏகே-61; படம்தான் பேசும் என இயக்குநர் பதிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....