Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்"நீங்கள் என்னை அப்படி அழைப்பதில் எனக்கு துளி கூட உடன்பாடு இல்லை"- உதயநிதி ஸ்டாலின்

    “நீங்கள் என்னை அப்படி அழைப்பதில் எனக்கு துளி கூட உடன்பாடு இல்லை”- உதயநிதி ஸ்டாலின்

    தன்னை மூன்றாம் கலைஞர் என்று அழைக்க வேண்டாம் என திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    புதுக்கோட்டை வடைக்கு மற்றும் தெற்கு திமுக சார்பில் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள தடிக்கொண்ட அய்யனார் திடலில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் கொண்டாடும் விழா, மறைந்த முன்னாள் திமுக பொதுசெயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு பெருவிழா, தொண்டர்களை போற்றுவோம் பொற்கிழி ஆகிய விழாக்களில் கலந்துக் கொண்டு உதயநிதி ஸ்டாலின், திமுக கட்சி உறுப்பினர்களுடையே உரையாற்றினார். இந்த விழாவில், திமுகவின் முன்னோடி தொண்டர்கள் 1051 பேருக்கு ஒரு நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் என கோடியே 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார். 

    அப்போது, அனைவரும் கோவிட்  தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா என்று பேசிய உதயநிதி ஸ்டாலின், தனக்கு சொல்வதைவிட செயல்பாடு தான் பிடிக்கும் என்று கூறினார். மேலும் அவர், எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு உதவி செய்யும் நிகழும் அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் கூறி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அவர் கலந்துக் கொள்வதாகும் தெரிவித்துள்ளார். 

    கடந்த 3 தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுத்துள்ளார்கள். அதற்கு கரணம் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் என்றும் தான் பெரியாரையோ அண்ணாவையோ பார்த்து வளர்ந்ததில்லை என்றும் தற்போது, திமுகவின் தொண்டர்களை பெரியார், கலைஞர், அண்ணாவாக பார்க்கிறேன் என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார். 

    மேலும் அவர், தன் மீது கொண்ட அன்பால் தொண்டர்கள், அவரை மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்றெல்லாம் அழைக்கிறார்கள் என்றும் தொண்டர்களுக்கு தனது வேண்டுகோள் என்றும் வேண்டுகோள் மட்டும்மல்ல உரிமையாக கேட்கிறேன் என்றும் மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று அழைப்பதில் தனுக்கு துளி கூட உடன்பாடு இல்லை என்றும், சிலர் தன்னை சின்னவர் என்று அழைப்பது அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    பல மீம் கிரியேட்டர்களும் பல சமூக வலைதள வாசிகளும் உதயநிதி இவ்வாறு பேசியதை வரவேற்றும் வன்மத்தை வெளிப்படுத்தியும் வருகின்றனர். 

    இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....