Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉதய்பூர் சம்பவம்: 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

    உதய்பூர் சம்பவம்: 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

    உதய்பூர் தையல்காரர் கன்னையா லாலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்தது தெரிந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற புகாரின் பேரில் உதய்பூர் ஐஜி, காவல்கண்காணிப்பாளர் உள்ளிட்ட 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நடந்தது என்ன’?

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில், பட்டப்பகலில் நடந்த கொலைச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த நிலையில், இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை  இத்தொகுப்பில் காண்போம்!

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்திலுள்ள தன்மண்டி என்ற பகுதியில் தையல் கடை நடத்திவந்தார் கன்னையா லால். சமீபத்தில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்துகளை வெளிப்படுத்திய முன்னாள் பா.ஜ.க நிர்வாகி நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் கன்னையா லால் பதிவிட்டதாகத் தெரிகிறது. இதனால், அவருக்குப் பல தரப்பிலிருந்தும் மிரட்டல்கள் வந்ததால், அவர் கடந்த சில வாரங்களாகத் தையல் கடையைத் திறக்காமல் இருந்திருக்கிறார்.

    மிரட்டல்கள் சற்று அடங்க, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடையைத் திறந்திருக்கிறார். இந்த நிலையில், ஜூன் 28 அன்று மதிய வேளையில், துணி தைப்பதற்காக வந்திருக்கிறோம் என்று கூறிக் கொண்டு வந்த இருவர், கன்னையா லாலை சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். பின்னர், அவரது தலையைத் துண்டித்து படுகொலையும் செய்திருக்கிறார்கள்.

    இந்நிலையில் கன்னையா லாலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்தது தெரிந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற புகாரின் பேரில் உதய்பூர் ஐஜி, காவல்கண்காணிப்பாளர் உள்ளிட்ட 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கொலை செய்ததாகச் சொல்லப்படும் முகமது ரியாஸ், கெளஸ் முகமது ஆகிய இருவரும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றனர். அந்த வீடியோவில், நபிகள் நாயகத்தைத் தவறாகப் பேசிய நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததால், இந்தக் கொலையைச் செய்ததாகச் சொல்லியிருக்கின்றனர்.

    மேலும், பிரதமர் மோடி, நுபுர் ஷர்மா ஆகியோருக்கு கொலை மிரட்டலும் விடுத்திருக்கின்றனர். இந்த வீடியோ வைரலாகப் பரவியது. பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகள் கொண்ட ரியாஸ் தனியாக ஒரு வாட்ஸ்அப் குழுவை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கொலை நடந்த அன்று இரவே வீடியோ வெளியிட்ட இருவரையும் கைது செய்தது ராஜஸ்தான் காவல்துறை. ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முகமது ரியாஸ், கெளஸ் முகமது ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணையை ராஜஸ்தான் காவல்துறை மேற்கொண்டது.

    இந்தக் குழுவில் உறுப்பினர்களையும் என்ஐஏ விசாரிக்கத் தொடங்கி உள்ளது. இவர்களில் ஒருவராக இருந்த முகம்மது முஜீப் தனது ஐந்து சகாக்களுடன் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி மத்தியப் பிரதேசத்தின் ரட்லாமில் 12 ஆர்டிஎப் வெடிகுண்டுகளுடன் சிக்கினார். இவர்கள் ‘அல் சுபா’ எனும் பெயரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்து வந்தது தெரியவந்துள்ளது.

    “அன்புள்ள அண்ணா…. ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் கடிதம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....