Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்வகுப்பறைக்குள் டூ வீலர் பார்க்கிங்? அரசு பள்ளி ஆசிரியர்களின் செயலால் மக்கள் வேதனை

    வகுப்பறைக்குள் டூ வீலர் பார்க்கிங்? அரசு பள்ளி ஆசிரியர்களின் செயலால் மக்கள் வேதனை

    விருத்தாசலம் அருகே அரசு பள்ளியில், பணியாற்றி வரும் ஆசிரியர்கள் வகுப்பறையிலேயே தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கும் செயல் மக்களை எரிச்சலடைய வைத்துள்ளது .

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்துள்ள கோமங்கலம் கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 40 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இதையும் படிங்க: பள்ளி வேனில் 3 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடூரம்.. நாடு எங்கே போகுது?

    இந்நிலையில் இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை பள்ளியின் வகுப்பறையில் நிறுத்துகின்றனர்.

    இதனால் அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமர்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதி மக்கள் மாவட்ட கல்வி அலுவலருக்கு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: ‘மதுக்கடைகளை  மூடினால் தான் மாணவர்களைக் காப்பாற்ற முடியும்’ – அன்புமணி வருத்தம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....