Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமின்சாரம் தாக்கி இரண்டு பெண் யானைகள் உயிரிழப்பு

    மின்சாரம் தாக்கி இரண்டு பெண் யானைகள் உயிரிழப்பு

    ஒடிசாவில் மின்சாரம் தாக்கி இரண்டு பெண் யானைகள் உயிரிழந்தன. 

    ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு பெண் யானைகள் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 25) தெரிவித்தனர். 

    கியோஞ்சர் மாவட்டத்தில் சத்தார் வரம்பில் உள்ள ஜூடியாவில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்திரா வளாகத்தில், மின் கம்பியில் சிக்கி, மின்சாரம் தாக்கி இரண்டு யானைகள் இறந்தது. 

    பசுமை நிறைந்த பகுதி என்பதால், அந்த வளாகத்துக்குள், யானைகள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 24) இரவு, யானைகள் கூட்டம் ஒன்று வளாகத்தில் இருந்ததாகவும், தாழ்வான மின் கம்பிகளை யானைகள் மிதித்தால், 2 யானைகளும் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், மின் கம்பி அறுந்து கிடப்பது குறித்து மின்சாரத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், க்ரிஷி விக்யான் கேத்திர அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ஒடிசாவில் 2019-2020 மற்றும் 2021-2022 ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் வெவ்வேறு காரணங்களால், 245 யானைகள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காரில் கடத்திச் செல்லப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....