Monday, April 29, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு!

    எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு!

    ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கைவிட்ட நிலையில் ட்விட்டர் நிறுவனம் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. 

    டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கடந்த மே மாதம் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை  44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ3.30 லட்சம் கோடி) வாங்குவதற்காக ட்விட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். 

    அதன்பின்னர், போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம் (Spam) குறித்த முழுமையான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். அதுவரையில் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படடுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். 

    இரண்டு மாதங்களாகியும், ட்விட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்து எந்த விவரங்களையும் தராததால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் கடந்த வாரம் அறிவித்தார். 

    இந்நிலையில், ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கைவிட்ட நிலையில், அவர் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்குத்தொடர்ந்துள்ளது. ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கட்டாயம் நிறைவு செய்யவேண்டுமென ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு அமெரிக்காவில் உள்ள டெலாவேர் சான்சரி நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய் கிழமை ட்விட்டர் நிறுவனம் சார்பாக தொடுக்கப்பட்டுள்ளது.

    கோளாறுடன் ஸ்பைஸ் ஜெட் விமானம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....