Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்துருக்கியில் நிலநடுக்கம்; 21,000-த்தை கடந்த பலி எண்ணிக்கை!

    துருக்கியில் நிலநடுக்கம்; 21,000-த்தை கடந்த பலி எண்ணிக்கை!

    துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 21,000-ஐ கடந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கம், துருக்கியில் பல்வேறு அசம்பாவிதங்களை நிகழ்த்தி வருகிறது.

    இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால், பல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இதனால் துருக்கியில் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைக்கின்றன. இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை சிரியா – துருக்கியில் 21,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    துருக்கியில் மட்டும் உயிரிழப்பு 17,674 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உயிரிழப்பு 3,377 ஆக அதிகரித்துள்ளது. சேதமடைந்த கட்டிட இடிபாடுகளை மீட்பு படையினர் தொடர்ந்து அகற்றி வருகின்றனர்.

    மேலும், பாதிப்பு கடுமையாக இருப்பதால், இரு நாடுகளிலும் உயிரிழப்பு 25,000-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது. இச்சூழலில், துருக்கிக்கு மீட்புப் பணிகளுக்காக இந்தியாவிலிருந்து 100 வீரர்களை கொண்ட 2 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களுக்கு 3 மாதக்கால அவசர நிலையை துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    சதமடித்த ரோஹித்சர்மா; நம்பிக்கையில் இந்திய அணி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....