Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசதமடித்த ரோஹித்சர்மா; நம்பிக்கையில் இந்திய அணி!

    சதமடித்த ரோஹித்சர்மா; நம்பிக்கையில் இந்திய அணி!

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா சதமடித்து இந்திய அணிக்கு நம்பிக்கைத் தந்துள்ளார். 

    ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

    இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்  முதல் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், அந்த ஆணி முதல் நாள் ஆட்டத்திலேயே 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இதன்பிறகு, களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 20 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். நேற்றைய ஆட்ட முடிவில், இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. ஆட்டக்களத்தில் ரோஹித் சர்மா 55 ரன்களுடனும், அஷ்வின் ரன்களேதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 

    இதைத்தொடர்ந்து, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நிதானமாக ஆடி வந்த இருவரில், அஷ்வின் 23 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, இதையடுத்து வந்த புஜாரா 7 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதன்பிறகு விராட் கோலி களத்தில் இறங்கினார். ஒருமுனையில் இரு விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். 

    உணவு இடைவேளையின்போது, இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 26 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ரோஹித் சர்மா 85 ரன்களுடனும், விராட் கோலி 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    உணவு இடைவேளைக்குப் பிறகு, வீசப்பட்ட முதல் பந்திலேயே கோலி 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அறிமுக வீரர் சூர்யகுமார் யாதவ், 8 ரன்களில் லயன் பந்தில் போல்ட் ஆகி ஏமாற்றமளித்தார். 

    மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தபோதும், ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி வந்தார். அவர் 171 பந்துகளில் சதமடித்தார். இது அவரின் 9-ஆவது டெஸ்ட் சதமாகும். 

    தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 80 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 118 ரன்களுடனும், ஜடேஜா 34  ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். மேலும், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியைவிட 49 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

    கடலை ரசிக்க சென்ற ரோஜா; செருப்பை ஏந்திய ஊழியர் – வெளியான புகைப்படத்தால் சர்ச்சை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....