Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசத்தீஸ்கர் மாநில சாலை விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு

    சத்தீஸ்கர் மாநில சாலை விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    சத்தீஸ்கர் மாநிலம், பாலோட பஜார் மாவட்டம், ஹிலோரா கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் நேற்று இரவு வேன் மூலம் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 

    அப்போது, வேன் காமாரியா கிராமம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

    இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 8 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதே சமயம், சிலர் மேல் சிகிச்சைக்காக ராய்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    தமிழ் எங்கே இருக்கிறது என தெரிவித்தால் தலையை அடமானம் வைத்து 5 கோடி ரூபாய்! பாமக நிறுவனர் அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....