Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்நாகர்கோயில் ரயில் நிலையத்தில் வடமாநில ஊழியரின் திமிர் பேச்சு; வைரலான காணொளி

    நாகர்கோயில் ரயில் நிலையத்தில் வடமாநில ஊழியரின் திமிர் பேச்சு; வைரலான காணொளி

    நாகர்கோயில் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க வந்த பயணியிடம் வடமாநில ஊழியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    வட மாநிலத்தவர்கள் வருகையின் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுவதாக பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தி திணிப்பு பிரச்சனை முதல் வேலை, உணவு, இருப்பிடம் வரை பல தரப்பில் வட மாநிலத்தவருக்கும் இங்குள்ளவர்களுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. 

    மேலும் இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் அதிகம் பக்கிரப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒரு காணொளி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளிடம் அங்குள்ள ஊழியர் ஒருவர் இந்தியில் தரக்குறைவாக வார்த்தையால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். 

    மேலும் பயணி ஆங்கிலத்தில் கேள்வி கேட்டும், அவர் இந்தியில் மட்டுமே பேசுகிறார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

    சத்தீஸ்கர் மாநில சாலை விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....