Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ் இலக்கியங்களை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு!

    தமிழ் இலக்கியங்களை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு!

    தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் அறிய வைப்பதற்கான முயற்சியைக் கையெடுத்துள்ளது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். 

    தமிழ்மொழியின் பழமையையும் அதன் தொன்மையையும் உலகறிய செய்வதற்காக தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களை மொழிப்பெயர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் முன்னெடுத்துள்ளது. திருக்குறளை அடுத்து பௌத்த மற்றும் தமிழில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை இலக்கியத்தை தற்போது உலக மொழிகளில் மொழிப்பெயர்ப்பதற்குரிய பணிகளில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

    மணிமேகலை இலக்கியத்தை சிங்களம், சீனா, மலாய், தாய், கொரியன், மங்கோலியன், ஜப்பான், பர்மீஸ் போன்ற 20 மொழிகளில் மொழிப்பெயர்க்கிறது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். 

    பௌத்த தத்துவங்கள் மற்றும் கருத்துக்களை எடுத்துரைக்கும் மணிமேகலை இலக்கியத்தை பௌத்த சமயத்தை பின்பற்றும் நாடுகளின் மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்வது போன்ற முயற்சியை எடுத்துள்ளது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். 

    இது மட்டும் இன்றி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் முன்பே எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய தமிழ் இலக்கியங்களை உலக மொழிகள் பலவற்றுக்கு மொழிபெயர்க்கும் பணிகளை நிறைவு செய்துள்ளது. மேலும் சங்க இலக்கியங்கள் அனைத்தையும் சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிப்பெயர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

    செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு தன்னாட்சி ஆய்வு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இது உலகளவில் செம்மொழி தமிழுக்கென்று நிறுவப்பட்டது. 2008 ஆம் ஆண்டு மே 19 முதல் சென்னையில் உள்ள பெரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது. முன்னதாக மைசூரில் 2006 மார்ச் மாதம் முதல் 2008 ஆம் ஆண்டு மே 18 வரை நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் எனும் பெயரில் செயல்பட்டு வந்தது. குறிப்பாக தமிழ் மொழியை உலகெங்கும் பரப்புவதற்கான பணிகளில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....