Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபேட் கம்மின்ஸ் அதிரடியால் திணறிய மும்பை இந்தியன்ஸ்; தொடரும் தோல்விப்பயணம்!

    பேட் கம்மின்ஸ் அதிரடியால் திணறிய மும்பை இந்தியன்ஸ்; தொடரும் தோல்விப்பயணம்!

    15 ஆவது ஐபிஎல் தொடரின் 14 ஆவது ஐபிஎல் போட்டியில், மும்பை அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நேற்று போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்றது. அனைவரும் எதிர்ப்பார்த்ததைப் போலவே பந்துவீச்சைத் தேர்வு செய்தது, கொல்கத்தா.

    மும்பை இந்தியன்ஸ் அணி 

    அதன்படி, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. பலமாக விளையாடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட மும்பை அணியானது தொடக்கத்தில் மிகவும் மந்தமாக விளையாடியது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 12 பந்துகளுக்கு மூன்று ரன்கள் மட்டுமே எடுத்து உமேஷ் யாதவ் பந்தில் வெளியேறினார்.

    அடுத்து களமிறங்கிய டிவால்ட் பிரெவிஸ் சற்று அதிரடியாக விளையாடி 19 பந்துகளில், 29 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் வெளியேறினார். மறுபுறம் மிகவும் நிதானமாய் விளையாடிய இஷான் கிஷான் பெரிதும் சோபிக்காமல், 21 பந்துகளுக்கு 14 ரனகளை மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

    இதன்பின்பு, சூர்யகுமார் யாதவ் அவர்களும் திலக் வர்மாவும் இணைய அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் தனது அரை சதத்தை விளாசியப்பின்பு பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் பில்லிங்ஸிடம் சிக்கினார். 

    சூர்யகுமார் யாதவிற்கு பிறகு ஆட்டக்களத்தில் குதித்த பொல்லார்டு மிகவும் அதிரடியாக ஆடி அனைவரையும் வியக்க வைத்தார். ஆம்! வெறுமனே 5 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார், பொல்லார்டு. பேட் கம்மின்ஸ் ஓவரில் மூன்று சிக்சர்களை அடித்து பிரம்மிக்க வைத்தார். 

    இருபது ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியானது, 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. பொல்லார்டு 22 ரன்களுடனும், திலக் வர்மா 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 

    இதனையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. புனே மைதானத்தில் இந்த இலக்கானது எளிதான இலக்கு என்றே புலப்பட, அந்த இலக்கை எட்ட தொடக்க ஆட்டக்கரார்களாக ரஹானேவும், வெங்கடேஷ் ஐயரும் களமிறங்கினர். 

    ஆனால், ரஹானே 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பத்து ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இந்த அதிர்ச்சி போதாது என்று மேலும் அதிர்ச்சியை பெற்றது, கொல்கத்தா அணி. 

    ஆம்! ஷ்ரேயாஸ் ஐயருக்கு பிறகு களமிறங்கிய சாம் பில்லிங்ஸ், நிதிஷ் ராணா, ரசல் ஆகியோர் தொடர்ச்சியாய் தங்களின் விக்கெட்டுகளைப் பறிகொடுக்க கொல்கத்தா அணி மோசமான நிலைக்குச் சென்றது. ஒருபுறம் இப்படியாக விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் வெங்கடேஷ் ஐயர் நிதானமாக விளையாடியபடி இருந்தார். இவருடன் பேட் கம்மின்ஸ் கைக்கோர்க்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திணறல் ஏற்பட்டது. 

    பேட் கம்மின்ஸ் 

    பேட் கம்மின்ஸ் தனது மட்டையால் மாயாஜாலம் நிகழ்த்தினார் என்றே சொல்ல வேண்டும். மும்பை அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். மும்பை அணி வீரர்களின் முகத்தில் ஏமாற்றம் பலமாகவே தெரிய ஆரம்பித்தது. பதினான்கு பந்துகளில்  அரைசதத்தைக் கடந்து கொல்கத்தா அணியை வெற்றிப்பெற செய்தார், பேட் கம்மின்ஸ்.

    பதிநான்கு பந்துகளில் சதம் அடித்ததன் மூலம், கே.எல்.ராகுலின் சாதனையை பேட் கம்மின்ஸ் சமன் செய்தார். இதற்கு முன்பு கே.எல்.ராகுல் 2018 ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிராக 14 பந்துகளில் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

    16 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து, நடப்புத்தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். பேட் கம்மின்ஸ் 56 ரன்களுடனும், வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அதிரடியாக விளையாடிய பேட் கம்மின்ஸ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

    நடப்புத் தொடரில் இதுவரை வெற்றி கணக்கைத் தொடங்காத மும்பை அணியின் தோல்விப்பயணம் தற்போதும் தொடர்கிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....