Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நிஜத்தில் பாலியல் வன்முறை, கனவில் பாம்புகள் - டிராகனாக தன்னை மாற்றிக்கொண்ட திருநங்கை!

    நிஜத்தில் பாலியல் வன்முறை, கனவில் பாம்புகள் – டிராகனாக தன்னை மாற்றிக்கொண்ட திருநங்கை!

    ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான செல்லப்பிராணிகளை பிடிக்கும். சிலருக்கு நாய் பிடிக்கும் சிலருக்கு பூனை பிடிக்கும். சிலருக்கு அவற்றை வளர்ப்பது பிடிக்கும். சிலருக்கு அதை பார்க்க மட்டுமே பிடிக்கும். இதிலும் வித்தியாசமாக சிலர் தன்னை தானே செல்லப்பிராணியாக மாற்றிக்கொள்ள ஆசை கொள்பர்களும் உண்டு. இவர்களுக்கு ஒரு பெயரும் உண்டு. அப்படிப்பட்ட நபர்கள் தேரியன்ஸ் (therians) என அழைக்கப்படுகிறார்கள். 

    அந்த வகையில் ஒரு விசித்திரமான ஒருவராக இணையத்தில் ஒருவர் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் டியாமட் ஈவா மெடூசா. இவர் அமெரிக்காவின் ஆரிசோனா மாகாணத்தில் ரிச்சர்ட் ஹெர்னாண்டஸாக பிறந்தவர். பிறகு இவர் அறுவை சிகிச்சை செய்து தன்னை பெண்ணாக மாற்றிக்கொண்டார். தனது பெயரை டியாமட் ஈவா மெடூசாவாக மாற்றிக்கொண்டார். இவர், பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகி இருக்கிறார். 

    இப்படி பல பிரச்சனைகளுக்கு ஆளாகிய மெடூசா மனிதர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். தனிமையில் இருந்த மெடூசாவுக்கு கனவுகளில் பாம்புகள் வரத் தொடங்கி இருக்கின்றன. இதுவே அவரின் மாற்றத்துக்கும் காரணமாக அமைந்துள்ளது. 

    american trans woman

    மெடூசா காது, மூக்கு, நாக்கு என உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சையின் மூலமாக தன்னையே ஒரு டிராகன் போல மாற்றியமைத்துள்ளார். காதையும் மூக்கின் துவாரங்களையம் நீக்கி, கண்களை பச்சை நிறமாக மாற்றியும் தனக்கு கொம்பையும் வைத்துள்ளார். 

    நாக்கை ஃபோர்க் போல் மாற்றி இருக்கிறார். உடல் முழுவதும் பாம்பு போன்ற டாட்டூக்களை குத்தி முழு டிராகன் போலவே தன்னை மாற்றி அமைத்துள்ளார். 

    இதுகுறித்தான புகைப்படங்களை மெடூசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    நியூசிலாந்து அணியை சுருட்டி மாஸ் காட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....