Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபேருந்து எண்ணால் ஏற்பட்ட விபரீதம் - சித்திகளின் ஆத்திரத்தால் பறிபோன உயிர்

    பேருந்து எண்ணால் ஏற்பட்ட விபரீதம் – சித்திகளின் ஆத்திரத்தால் பறிபோன உயிர்

    பேருந்து எண்ணை கையில் எழுதிய மாணவியை கேள்வி கேட்டதால், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்துள்ள கொந்தளம் மண்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரின் மகள் தேவதர்ஷினி. இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

    இந்நிலையில், கல்லூரியிலிருந்து மார்க் சீட் வாங்குவதற்காக பள்ளிக்கு கே10 என்ற நகரப் பேருந்தில் தேவதர்ஷினி சென்றுள்ளார். 

    இதையடுத்து, மாலை வீடு திரும்பியதும் தேவதர்ஷினி தனது கையில் கே10 என்ற எண்ணை எழுதிக் கொண்டிருந்ததை அவரின் தம்பி பார்த்துள்ளான். உடனே அவன், தனது சித்திகளிடம் இதைச் சொல்லியிருக்கிறான். இதற்கடுத்து அவர்களின் சித்திகளான காளியம்மாள் மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரும் கே10 என்று எதற்காக எழுதினாய்? என கேள்வி கேட்டு மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 

    இதையும் படிங்க : நாய்க்கு மருத்துவர் செய்த கொடுமை; உயிரை காப்பாற்றிக்கொள்ள படாத பாடுபட்ட நாய்

    தொடர்ந்து மாணவிக்கும், அவரின் சித்திக்களுக்கும் இடையே இரவு 11 மணி வரை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவி இன்று அதிகாலை 5 மணி அளவில் அவரது வீட்டிற்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 

    இந்தச் சம்பவம் குறித்து, அக்கம் பக்கத்தினர் கொடுமுடி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, தீயணைப்பு துறையினருடன்  விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    மேலும், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....