Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாய்க்கு மருத்துவர் செய்த கொடுமை; உயிரை காப்பாற்றிக்கொள்ள படாத பாடுபட்ட நாய்

    நாய்க்கு மருத்துவர் செய்த கொடுமை; உயிரை காப்பாற்றிக்கொள்ள படாத பாடுபட்ட நாய்

    ராஜஸ்தானில் மருத்துவர் ஒருவர் தனது காரில் நாயைக் கட்டி இழுத்து சென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 

    ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில், மருத்துவர் ஒருவர் தனது காரில் நாயை கட்டி சாலையில் இழுத்து சென்றுள்ளார். அந்த நாய் காரின் வேகத்துக்கு தொடர்ந்து ஓடியது. நாய்க்கு கட்டிய கயிறு நீளம் என்பதால் காரின் இடதுபுறமும் வலதுபுறமும் என அது தப்பிப்பதற்காக வழியை தேடியுள்ளது.  

    இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள், அந்தக் காரை வழிமறித்து, நாயை அவிழ்த்துவிட்டனர். பிறகு காயத்துடன் இருந்த நாயை ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். 

    இதைத்தொடர்ந்து, ரஜ்னீஷ் கால்வா என்பவர் காவல்துறையிடம் இத்தகவலை தெரிவித்துள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில் நாயைக் கட்டி இழுத்து சென்ற மருத்துவரை மிருகவதை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

    தனது வீட்டின் அருகே தெரு நாய் வசித்து வந்ததாகவும், அதனால் தான் இப்படி செய்ததாகவும் விசாரணையின் போது அந்த மருத்துவர் கூறியுள்ளார்.    

    இதையும் படிங்க : தெருநாய்களை கொலை செய்வது தீர்வாகாது – கேரள முதல்வர் பினராயி விஜயன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....