Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

    சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

    சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டி ஒற்றையர் பிரிவில் செக் குடியரசைச் சேர்ந்த 17 வயது இளம் வீராங்கனை லிண்டா ஃபுருவிர்டோவாவும், இரட்டையர் பிரிவில் கேப்ரியலா (கனடா)-ஸ்டெஃபானி (பிரேசில்) இணையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

    தமிழக அரசு, டிஎன்டிஏ, டபிள்யுடிஏ இணைந்து நடத்தும் இப்போட்டியின் ஒரு பகுதியாக நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இரட்டையர், ஒற்றையர் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றன.

    இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.9 லட்சம் ரொக்கப் பரிசும், 280 டபிள்யுடிஏ புள்ளிகளும் வழங்கப்பட்டது. ரன்னர் அப் இணைக்கு ரூ.5.33 லட்சமும், 180 புள்ளிகளும் வழங்கப்பட்டன.

    இதையும் படிங்க : பாடி அசத்திய அன்புமணி ராமதாஸ்! நண்பர்களுடனான சந்திப்பில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு…

    மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினர். 

    இந்த நிகழ்வில் ஆ.ராசா எம்.பி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, உறுப்பினர்-செயலர் கார்த்திகேயன், டிஎன்டிஏ தலைவர் விஜய் அமிர்தராஜ், போட்டி அமைப்பாளர் கெர்ரிலின் கிராமர், ஹிதேன் ஜோஷி உள்பட பலர் பங்கேற்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....