Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுரயில்வே கேட் பகுதியில் வருடாந்திர பராமரிப்பு பணி - அவஸ்தையில் வாகன ஓட்டிகள்

    ரயில்வே கேட் பகுதியில் வருடாந்திர பராமரிப்பு பணி – அவஸ்தையில் வாகன ஓட்டிகள்

    முள்ளுவாடி கேட் – சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அஸ்தம்பட்டி செல்லும் பிரதான சாலையாக உள்ள பகுதி. இந்த வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணப்படுவது வழக்கம். 

    இப்படியான முள்ளுவாடி கேட் பகுதியில் , தற்போது மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படுகிறது. 

    இந்த நிலையில் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் வருடாந்திர பராமரிப்பு பணி இன்று (ஆகஸ்ட் – 24) நடைபெறுவதையொட்டி இன்று போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் ரயில்வே கேட் மூடப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்வால், வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் அஸ்தம்பட்டி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக மேம்பாலம் நான்கு ரோடு சென்று அங்கிருந்து அஸ்தம்பட்டி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. 

    அதேபோல் வரும் வாகனங்களும் சுந்தர்ராஜ் அருகில் இருந்து ரோட்டரி அரங்கம், தமிழ்ச் சங்கம் வழியாக மேம்பாலம் ஆட்சியர் அலுவலகம் வழியாக பழைய பேருந்து நிலையம் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பல கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாயினர்.

    ராஜஸ்தானில் கடும் மழை வெள்ளம் – மக்கள் தவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....