Sunday, March 17, 2024
மேலும்
    Homeவாழ்வியல்சுற்றுலாத்தளங்கள்ஊட்டி சாலையோரங்களில் பூத்து குலுங்கும் செர்ரி மலர்கள்!

    ஊட்டி சாலையோரங்களில் பூத்து குலுங்கும் செர்ரி மலர்கள்!

    ஊட்டி மலைப்பாதையில் பல இடங்களில் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்குவதால், இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். 

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, மஞ்சூர், கைகாட்டி, குன்னூர் உள்பட பல பகுதிகளில் சாலையோரங்களில் ஒரு சில இடங்களில் செர்ரி மலர்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. 

    இந்த செர்ரி மரங்கள் வழக்கமாக நீலகிரியில் இரண்டாவது சீசன் ஆரபிக்கும் மாதங்களான செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்கம். மேலும், ஜனவரி மாதம் வரை கூட இந்த செர்ரி பூக்களை சாலையோரங்களில் காண முடியும். 

    இந்நிலையில், இந்த ஆண்டு சற்று முன்னதாகவே அதாவது, ஆகஸ்ட் மாதத்திலேயே செர்ரி பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. 

    இந்த செர்ரி மலர்களைக் காண, அந்த வழியாக செல்லும் உள்ளூர் சுற்றுலா பயணிகள், அதனைக் கண்டு ரசிக்கின்றனர். மேலும், அந்த மரங்கள் அருகில் நின்று, செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். 

    பொதுவாக குளிர் அதிகமாக இருக்கும் பகுதிகளிலும், குறிப்பாக சதுப்பு நிலப்பகுதிகள் மற்றும் நீரோடைகளின் அருகில், இந்த செர்ரி மரங்கள் அதிக அளவு காணப்படுகின்றன.

    ஒக்கேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு; குளிக்க தடை நீட்டிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....