Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுற்றாலம் பிரதான அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

    குற்றாலம் பிரதான அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

    குற்றாலம் பிரதான அருவியில் நீர்வரத்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    கடந்த இரண்டு வாரங்களாகவே குற்றால அருவிகளில் அதீத தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. மேலும் சபரிமலை சீசன் என்பதால் பல சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

    இந்நிலையில், நேற்று காலையில் பிரதான அருவியில் நீர்வரத்து குறைந்தது. இதனைத்தொடர்ந்து, குற்றலாம் பிரதான அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறை அனுமதி வழங்கியது. 

    1895 கெளரவ விரிவுரையாளர்கள் காலி பணியிடங்கள்; தகுதியானோர் விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயித்த அமைச்சர் பொன்முடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....