சென்னை: சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து ரூ.4,725-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,745 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து ரூ.4,725-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ரூ.37,800-க்கு விற்பனையாகிறது
அதேபோல், சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,176 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 21 ரூபாய் குறைந்து ரூ.5,155-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து ரூ.41,240-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில், நேற்று ஒரு கிராம் வெள்ளி 61ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் அதிகரித்து, ரூபாய் 62.40 ரூபாய் காசுகளுக்கு விற்பனையாகிறது.
டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.5350 ஆக உள்ளது.