Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்சபரிமலை தரிசனம்: வரும் 17-ம் தேதி முதல் சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்.,கட்டணம் எவ்வளவு தெரியுமா?

    சபரிமலை தரிசனம்: வரும் 17-ம் தேதி முதல் சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்.,கட்டணம் எவ்வளவு தெரியுமா?

    சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம். இந்நிலையில் பக்தர்களின் வசதி கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு நவம்பர் 17ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என இரு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் பெரியவர்களுக்கு ரூ.1090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த அதிநவீன மிதவை சொகுசு பேருந்து சேவை வரும் ஜனவரி 18ம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பேருந்துகளின் இருக்கைகளை, www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இதே போல், சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

    இதையும் படிங்க:படுகர் இனத்தில் முதல் பெண் ‘லெப்டினென்ட்’ ! தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஊட்டி ராணி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....