Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபடுகர் இனத்தில் முதல் பெண் 'லெப்டினென்ட்' ! தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஊட்டி ராணி

    படுகர் இனத்தில் முதல் பெண் ‘லெப்டினென்ட்’ ! தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஊட்டி ராணி

    படுகர் இனத்தில் முதல் பெண் லெஃப்டினன்ட் ஜெனரலாக உயர்ந்து தடம் பதித்திருக்கும் பவித்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

    பெங்களூர் ராஷ்ட்ரிய ராணுவ பள்ளியில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர், மனோகரன். நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே உள்ள உபதலை கிராமத்தில் தற்போது வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்கிற மகள் உள்ளார். இவர் சிறுவயது முதலே ராணுவத்தின் மீது அதீத ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். அதற்கான முன்னெடுப்புகளை பவித்ரா தீவிரப்படுத்தினார்.

    தீவிர முயற்சியால், சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சி பெற தகுதிபெற்றார். இந்நிலையில், 9 மாத காலம் பயிற்சி பெற்று வந்த நிலையில், தற்போது பயிற்சி நிறைவடைந்து நிலையில், பவித்ரா லெஃப்டினன்ட் ஜெனரலாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

    மேலும், சென்னையில் கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் சிறந்த பயிற்சி பெற்றமைக்கான வாள் மற்றும் வெள்ளிப் பதக்கத்தையும் பரிசாக பெற்றிருக்கிறார். இதன்பிறகு, சொந்த ஊருக்கு வருவதை தந்திருந்தார். பவித்ராவை ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். படுகர் இனத்தைச் சேர்ந்த முதல் பெண் லெஃப்டினன்ட் ஜெனரல் என்ற பெருமையை பவித்ரா பெற்றுள்ளார். 

    இப்படியான பெருமைமிகு தருணத்தில், பவித்ரா பேசியது மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. ‘ சமுதாயத்தில் பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது. பெண்களுக்கு விரைவாக திருமணம் செய்வதிலும், குழந்தை பெற்றுக்கொள்வதிலும் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் என எதுவிருந்தாலும் நமது மனம் சொல்வதை கேட்டு செய்லபட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    மேலும், நமது குறிக்கோளை இலக்காக கொள்ள பெற்றோரை பெருமைபடுத்தும் விதமாகவே, நமது குறிக்கோள்கள் இருக்க வேண்டும் என்று பவித்ரா தெரிவித்தார்.

    இதையும் படிங்கதிடீரென வெடித்த டயர்.. படார் என பற்றிய தீ.. சிதம்பரத்தில் பஸ் பயணிகள் அலறியடித்து ஓட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....