Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு11.78 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகளின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

    11.78 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகளின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

    தமிழகம் முழுவதும் 4012 மையங்களில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடைபெற்றது. 5,529 காலி பணியிடத்துக்கு நடைபெறும் தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவி 116 பணியிடங்கள் குரூப் 2ஏ பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

    இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 117 இடங்களில் தேர்வு நடைபெற்றது. 

    தேர்வு எழுதுபவர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு நடைபெறும் இடங்களுக்கு வர வேண்டும். 9 மணிக்கு பிறகு வரக்கூடிய தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே போல தேர்வு பிற்பகல் 12.30 மணிக்கு முடிந்தாலும், பிற்பகல் 12.45 மணி வரை தேர்வர்கள் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவை டிஎன்பிஎஸ்சி விடுத்துள்ளது.

    நடைபெற்ற தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வை எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்தனர். அதில் 9,94,878 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். பல்வேறு காரணங்களினால், 1,83,285 பேர் தேர்வு எழுதவில்லை. 

    ஒடிசாவில் ரயிலில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....