Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'சீமான் ஒரு பாலியல் குற்றவாளி' - எம்.பி ஜோதிமணி விளாசல்..

    ‘சீமான் ஒரு பாலியல் குற்றவாளி’ – எம்.பி ஜோதிமணி விளாசல்..

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்பத்தூரில் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சூழலில் அவருக்கு 31 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த சூழலில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ” திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் பேரறிவாளன் விஷயத்தில் செய்தது என்னவென்று கூற முடியுமா? ஜெயலலிதா இருந்த போது  தீர்மானம் ஏற்றினார்கள். ஆனால், கருணாநிதி ஆட்சியில் நளினியை மட்டும் ஆயுள் தண்டனை கொடுத்து மற்றவரை தூக்கில் போட அனுமதித்தது.

    மேலும், இந்த போராட்டத்தின் வெற்றியை பெற்றது பேரறிவாளன் தான், அவரே சட்டங்களை படித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இந்த வழக்கை தானே முடித்து வென்று உள்ளார். வழக்கறிஞர்கள் பிரபு மற்றும் பாரி இருவரும் தான் அவருக்காக வழக்கை முன்னெடுத்து சென்றார்கள். ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? அவரும் தான் 400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி 26,000 பேரை அழித்து உள்ளார்” என சாடினார்.

    இந்த நிலையில் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்து கரூர் எம்பி ஜோதிமணி ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், சீமான் ஒரு பாலியல் குற்றவாளி. சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயகன்,தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது” என காட்டமாக பதிவு செய்துள்ளார்.

    நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டு அந்த வழக்கு தற்போது எந்த நிலையில் இருப்பது என்று தெரியவில்லை… இதை மறைமுகமாக சுட்டிகாட்டிதான் ஜோதிமணி சீமானை பாலியல் குற்றவாளி என விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....