Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஒடிசாவில் ரயிலில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு..

    ஒடிசாவில் ரயிலில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு..

    வியாழக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஒடிசாவிலுள்ள கேந்துஜர் மாவட்டத்தில் சரக்கு ரயில் ஒன்று மூன்று யானைகளின் மேல் மோதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    20 யானைகள் கூட்டாக ரயில்பாதையினை கடந்து கொண்டிருந்த வேலையில் வந்த ரயிலானது இரண்டு குட்டி யானை உட்பட மூன்று யானைகளின் மேல் மோதியுள்ளது. இதில் ஒரு குட்டியானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. படுகாயமடைந்த இரண்டு யானைகளும் நேற்று காலை உயிரிழந்தன.

    ‘யானைக்கூட்டத்தின் நகர்வுகள் வனத்துறை அதிகாரிகளால் கவனிக்கப்படுகிறது. அவைகளின் நகர்வுகள் எப்பொழுதும் ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவதுடன், ரயிலானது 25 கிலோமீட்டருக்கு குறைவான வேகத்திலேயே ஓட்டப்படுகிறது; இந்த விபத்து இருட்டின் காரணமாக நிகழ்ந்துள்ளது.’ என்று மூத்த வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

    கடந்த எட்டு வருடங்களில் 11 யானைகள் ரயில் விபத்தினாலும், நான்கு யானைகள் சாலை விபத்துக்களாலும், 13 யானைகள் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளன என்று வன ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

    தொடரும் சோகம்..

    இயற்கை அல்லாத முறைகளில் யானைகள் அதிகம் இறப்பதில் ரயில் விபத்துக்கள் இரண்டாம் இடத்தில் உள்ளது. 2009ம் ஆண்டிலிருந்து இதுவரை 186 யானைகள் ரயில் மோதல்களின் மூலம் இறந்துள்ளதை இந்தியாவின் காடுகள் மற்றும் பருவநிலை மாறுபாடு குறித்த அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

    இதில் 62 யானைகள் அசாம் மாநிலத்திலும், மேற்கு வங்கத்தில் 57 யானைகளும், ஒடிசாவில் 27 யானைகளும் இறந்துள்ளன. 2012-13ம் ஆண்டில் அதிக அளவு யானைகள் இறந்துள்ளன. பத்து மாநிலங்களில் 27 யானைகள் அந்த வருடத்தில் கொல்லப்பட்டுள்ளன.

    டிசம்பர் 2021ம் ஆண்டு இந்தியாவின் தலைமைக் கணக்கு தணிக்கையாளர், இந்த அளவிற்கு யானைகள் ரயிலில் மோதி இறப்பதற்கு கரணம் வனத்துறை மற்றும் ரயில்வே துறையின் அலட்சியப் போக்கே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிக அளவு யானைகள் “யானைகளின் வழித்தட பாதைகள்’ என்று குறிப்பிட்ட பகுதிகளிலேயே கொல்லப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    நிலத்தின் மிகப்பெரிய உயிரினங்களான யானைகள் காடுகளின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றுகின்றன. இந்த மாதிரியான விபத்துக்களால் யானைகளை அதிகளவு இழப்பது எந்த விதத்திலும் நமக்கும், நமது சுற்றுச்சூழலுக்கும் நல்லது இல்லை என்பதே உண்மை.

    77 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவான வெப்பநிலையினை பதிவு செய்த பெங்களூர்!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....