Monday, March 18, 2024
மேலும்
    Homeவானிலை77 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவான வெப்பநிலையினை பதிவு செய்த பெங்களூர்!!

    77 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவான வெப்பநிலையினை பதிவு செய்த பெங்களூர்!!

    நேற்று காலை நிலவரப்படி பெங்களூரில் 17.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 77 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மே மாதத்திற்கான குறைவான வெப்பநிலையினை பதிவு செய்துள்ளது.

    இதற்கு முன்னர் 1945ம் ஆண்டு 16.7 டிகிரி செல்சிஸ் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு முன்னதாக 2013ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி குறைவான வெப்பநிலையான 18.9 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்திருந்தது. 

    மே 12ம் தேதி குறைவான அதிகபட்ச வெப்பநிலையான 24.3 டிகிரி செல்சிஸ்சினை அடைந்த நிலையில், நேற்று அதனினும் குறைந்து 22.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது.

    அடுத்த 48 மணி நேரங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையமானது கூறியுள்ளது. மேலும் மே 24ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தினைப் பொறுத்த வரை, கர்நாடகக் கடற்கரைப் பகுதி மற்றும் தெற்கு கர்நாடகப் பகுதிகளில் அதி தீவிர கனமழையும், குடகு பகுதிகளில் கன முதல் மிகக் கனமழையும், மாநிலத்தின் பிற பகுதிகளில் கனமழையும் வரும் காலங்களில் பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.

    இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்தே பெங்களூரு நகரமானது குறைவான வெப்பநிலையினைப் பதிவு செய்து வருகின்றது. 

    சென்ற வாரம் பெங்களூருவின் வெப்பநிலையானது, சிம்லா போன்ற குளிர்பிரதேசங்களின் வெப்பநிலையினை விட குறைவாகப் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த குறைவான வெப்பநிலையினை பெங்களூருவில் வசிக்கும் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    77 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவான வெப்பநிலையினை பெங்களூரு பதிவு செய்திருந்த நிலையில் வட மாநிலங்களில் இதற்கு நேர் மாறாக வெப்பக் காற்று வீசிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் – குரங்கு அம்மை வைரஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....