Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டாசு வெடிக்க கட்டுப்பாடு: 1.5 லட்சம் பேர் வேலை இழந்த அவலம்

    பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு: 1.5 லட்சம் பேர் வேலை இழந்த அவலம்

    தில்லி உள்ளிட்ட பல நகரங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை மற்றும் நேர கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகளால் தமிழகத்தின் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொழிலில் 1.5 லட்சம் மக்கள் வேலை இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டாசு விற்பனை குறைந்து காணாப்பட்ட நிலையில், தற்போது தீபாவளி சமயத்தில் விற்பனை கலைக்கட்டினாலும் பட்டாசு தொழிலில் நட்டம் நீடிப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    சுமார் 7 லட்சம் பேர் பட்டாசு தொழிலில் வேலைவாய்ப்பை பெற்றிருந்த நிலையில், தற்போது 1000 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவர்களில் 6.5  லட்சம் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துக்காக ஒரே வருவாய் இந்த பட்டாசு உற்பத்தியை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். 

    பட்டாசு தயாரிப்பில் பேசியம் தனிமத்துக்கு தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளால் இந்த தொழிலில் 1.5 பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது. 

    அதேபோல் பட்டாசு உற்பத்தியில் சரவெடிகள் முக்கியத்துவமானதாக இருக்கும். ஆனால், அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சரவெடிகள் முழுவதும் கைகளால் செய்யப்படுபவை. இதற்கு தடை விதிக்கப்பட்டதால், ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்ததாக தெரிவிக்கின்றனர். 

    இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை; சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....