Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நீங்கள் விரும்பினால் தெய்வம், இல்லையெனில் வெறும் கற்சிலை: முஸ்லிம்களோடு ஒப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக எம்.எல்.ஏ

    நீங்கள் விரும்பினால் தெய்வம், இல்லையெனில் வெறும் கற்சிலை: முஸ்லிம்களோடு ஒப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக எம்.எல்.ஏ

    பீகாரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் இந்து கடவுள்கள் குறித்து பேசிய கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    பீகார் மாநிலம் பாகல்பூரில் பிர்பைண்டி பகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் லாலன் பஸ்வான் இந்து கடவுள்கள் குறித்து பேசியதாவது: 

    முஸ்லிம்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை. ஆனால், அவர்கள் பணக்காரர்களாக இல்லையா? முஸ்லிம்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவதில்லை. ஆனால் அவர்கள் அறிஞர்களாக இல்லையா? 

    முஸ்லிம்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஆக மாட்டார்களா? ஆன்மா மற்றும் கடவுள் சார்ந்த விஷயம் எல்லாம் மக்களின் நம்பிக்கை மட்டுமே.

    நீங்கள் விரும்பினால் அது தெய்வம், இல்லையெனில் அது வெறும் கல்சிலை. நாம் தெய்வங்களை நம்புகிறோமா, இல்லையா என்பது நம்மை பொறுத்தது. 

    ஒரு தர்க்கரீதியான முடிவை அடைய அறிவியல் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். நீங்கள் நம்புவதை நிறுத்தினால், உங்கள் அறிவுத்திறன் அதிகரிக்கும். 

    இவ்வாறு, அவர் பேசியுள்ளார். 

    இந்து கடவுள்கள் குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: ஆறுமுகசாமி அறிக்கையில் நுட்பமான பல தகவல்கள் சொல்லப்படவில்லை-பாமக தலைவர் கருத்து

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....