Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு!

    தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு!

    தமிழ்நாட்டில் உள்ள ஒரே மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில் உள்ளது. இதில் படிக்கும் மாணவர்கள் நேற்று தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    கடந்த ராம நவமி தினத்தன்று டெல்லி காவிரி விடுதியில் ஜெஎன்யு மாணவர்களை அங்குள்ள ஏபிவிபி  மாணவர்கள் தாக்கி உள்ளனர். இதைக் கண்டித்து இப்போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள். 

    ராம நவமியை முன்னிட்டு காவிரி விடுதியில் அசைவம் உண்ணக் கூடாது என்று பிஜேபி கட்சியின் அமைப்பான ஏபிவிபி மாணவர்கள் அங்குள்ள உணவு திட்டத்தை மாற்ற வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு கேன்டீன் அமைப்பு இது உங்களுக்கான தனிப்பட்ட இடம் அல்ல, இது அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொதுவான இடம் என்று குறிப்பிட்டுள்ளனர்.  

    இதனிடையில் வாக்குவாதம் முற்றி இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே வன்முறை கலந்துள்ளது. இரு தரப்பு மாணவர்களும் மாறிமாறி கற்களை எரிந்து வன்முறை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். சுமார் 60 மாணவ மாணவிகள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் விடுதி செயலாளரையும் சேர்த்து தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் வரவழைக்கப்பட்டனர். மேலும் எந்தவித அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஜெஎன்யு மாணவர்களை அசைவம் உண்ணக் கூடாது என்று தேவையற்ற முறையில் பேசி, அவர்களை தாக்கியதை கண்டிக்கும் விதமாக திருவாரூர் பல்கலைக்கழக மாணவர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி வீதியில் நடந்தனர். மேலும் பல்வேறு முழக்கங்களை அந்த அமைப்பினருக்கு எதிராக எழுப்பி பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆண் பெண் என அனைத்து மாணவர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அந்த இடமே சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....